பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே நீதிமன்ற திறப்பு குறித்து முடிவு - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
வழக்கறிஞர்கள்,பொதுமக்கள், ஊழியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்த பின்னரே நீதிமன்ற திறப்பு குறித்து முடிவெடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.
வருமானம் இல்லாமல் தவிப்பதாலும், காணொலியில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாலும், உயர் நீதிமன்றத்தை திறக்க கோரி பார் கவுன்சில், வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை நீதிபதி, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என கூறியுள்ளார்.
காணொலி விசாரணைக்கு ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், வீட்டிலிருந்து இணையம் மூலம் வழக்கில் ஆஜராக முடியாதவர்களுக்கு நீதிமன்றத்தில் தனி இணையதள அறை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே நீதிமன்ற திறப்பு குறித்து முடிவு - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி #APSahi | #ChennaiHighCourt | #Coronavirus | #Covid19 https://t.co/Vp3cKMJdGt
— Polimer News (@polimernews) July 21, 2020
Comments