மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு, அதிமுக, திமுக, பாமக, திக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்துள்ள வாதத்தில் , மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும் போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற விதிகள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும், பிறகு அந்நீதிமன்ற உத்தரவின்படி, அதில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments