புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

0 1870
அதிமுக உறுப்பினரின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வகையில் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் நாராயணசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியதும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் உருவச் சிலை வைக்க பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ள நிலையில், கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் தொடங்குவது கண்டிக்கத்தக்கது எனவும், மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் அதிமுக உறுப்பினர் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஸ்டாலின் குறித்த அதிமுக உறுப்பினரின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக்கூறி திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments