கறுப்பர் கூட்டம் சேனலில் இருந்த 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்

0 9839

கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலில் இருந்த 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.

கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை வழக்கில் கறுப்பர் கூட்டம் இணைய தள சேனல் நிர்வாகிகள் சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன், கேமரா மேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சேனலை முடக்க வேண்டும் என யூ ட்யூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலை ஒட்டுமொத்தமாக யூ ட்யூப் நிறுவனம் தான் முடக்க முடியும். இருப்பினும் அதில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் & ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என போலீஸார் கருதுவதால் பொதுமக்கள் யாரும் அந்த வீடியோக்களை பார்க்க முடியாதபடி நீக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments