சுனாமி போல எழுந்த அலைகள்..! கொச்சி அருகே கிராமத்துக்குள் புகுந்த கடல்நீர்

0 3287
கொச்சி அருகே செல்லனம் கடலோர கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது

கேரள மாநிலம் கொச்சி அருகே கடலோர கிராமத்துக்குள் 2ஆவது நாளாக சுனாமி போல பல அடி உயரத்துக்கு கடல்நீர் புகுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

செல்லனம் கடலோர கிராமத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடல் கொந்தளிப்பால் நீர் ஊருக்குள் கடல்நீர் புகுந்ததில் ஒரு வீடு முழுவதும் இடிந்தது. 4 வீடுகள் பகுதியளவுக்கு சேதமடைந்தன. இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் நேற்று தொடர்ந்து 2ஆவது நாளாக கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.

இதில் ஒரு வீடு முழுவதும் இடிந்ததோடு, சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவுக்கு சேதமடைந்தன. கடல்நீர் புகுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

அந்த பணி 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருப்பதே கடல்நீர் புகுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. சுமார் 200 பேருக்கு கொரோனா உறுதியாகி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடல்நீரும் புகுந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments