இந்த ஆண்டு ஹஜ்ஜில் மொத்தம் 1000 பேருக்கு மட்டுமே அனுமதி
வரும் 31 ஆம் தேதி துவங்க உள்ள ஹஜ் சடங்குகளில் சவூதியில் இருக்கும் பல வெளிநாட்டவர் உட்பட சுமார் 1000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கபடுவார்கள் என சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
வழக்கமாக 25 லட்சம் பேர் கூடும் ஹஜ்ஜில், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஹஜ் அமைச்சர் முகம்மது பென்டன் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வேறு எந்த நோயும் இல்லாத 65 வயதிற்கும் குறைவான நபர்கள் ஹஜ்ஜில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்கள் என கூறிய அவர், மெக்காவிற்கு வருவதற்கு முன்னால் அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என்றும், 5 நாள் ஹஜ் சடங்குகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டுத் தனிமையில் இருத்தல் அவசியம் என்றும் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளிலேயே மிகவும் அதிகமாக சவூதியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
Comments