லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி... வைரலாகும் புகைப்படம்

0 5425
லம்போர்கினி காரில் வலம் வந்த நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், லம்போர்கினி காரை தானே ஓட்டியபடி வலம் வந்த புகைப்படம் வெளியான நிலையில் ட்விட்டரில் லயன் இன் லம்போர்கினி எனும் ஹேஷ்டேக் டிரெண்டானது.

ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி விலையுயர்ந்த லம்போர்கினி காரை ஓட்டியபடி வலம்வரும் புகைப்படம் வெளியானது. இதனை அடுத்து ரஜினியின் இந்த புகைப்படத்தை டேக் செய்து லயன் இன் லம்போர்கினி என ரசிகர்கள் ஷேர் செய்தனர். இதனால் அந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments