பைக்கை பறிமுதல் செய்ததற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

0 3594

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததற்காக மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து கொண்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 12-ம் தேதி இருசக்கரவானகத்தில் சென்ற அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலனை ஓ.ஏ.ஆர். திரையரங்கம் அருகே போலீசார் தடுத்தி நிறுத்தி முழு ஊரடங்கை மீறியதாக வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காகதான் தாம் வெளியே வந்ததாக கூறி முகிலன் வாகனத்தை திரும்பக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாகனம் வழங்கப்படாததால் முகிலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதையடுத்து, 90 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments