உத்தர பிரதேசத்தில் மகள்களின் கண் முன்னால் செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு
உத்தரபிரதேசத்தில் செய்தியாளர் ஒருவர் தனது 2 மகள்களின் கண்முன்னால் துப்பாக்கியால் சுடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காஜியாபாத்தின் விஜய் நகர் பகுதியை சேர்ந்த செய்தியாளரான விக்ரம் ஜோஷி, நேற்றிரவு 10.30 மணியளவில் 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழிமறித்து தாக்கப்பட்டார். இதை கண்டு 2 மகள்களும் ஓட்டம் பிடித்த நிலையில், செய்தியாளரை மட்டும் அக்கும்பல் சரமாரியாக தாக்கி, பிறகு துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டது.
இதில் ஒரு தோட்டா தலையில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் தனது மருமகளிடம் சிலர் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக காவல்நிலையத்தில் செய்தியாளர் புகார் அளித்திருந்தார்.
गाजियाबाद में एक पत्रकार नें अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध किया तो गोली मार दी गई,
— Pravin Yadav (@pravinyadav) July 21, 2020
अस्पताल में भर्ती है विक्रम
परिवार का आरोप कि विक्रम की भांजी को लगातार छेड़ा जा रहा था और उसके बावजूद @Uppolice ने कोई कार्रवाई नहीं की#UPPolice #GhaziabadPolice pic.twitter.com/hVjlbeFy3B
அதற்கடுத்த நாளில் இத்தாக்குதல் நடந்துள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து, இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments