காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள்
சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் ஏதுவாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் மீன் வாங்க துறைமுகத்திற்குள் அனுமதி இல்லை.
மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதே போல் சிறிய மீன்களை கொள்முதல் செய்ய நாளொன்றுக்கு 600 நடுத்தர வியாபாரிகள், தலா 150 பேர் கொண்ட குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் நாளொன்றுக்கு 50 முதல் 70 விசை படகுகள் மட்டுமே மீன் பிடிக்க செல்லவும், 50 படகுகள் மட்டுமே மீன்பிடி இறங்கு தளத்தில் மீன்விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments