கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 20 ஹவாலா கும்பல்களுக்கு தொடர்பு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 20 ஹவாலா கும்பல்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள அரசில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சரித்குமார் தவிர, சொப்னா உள்பட மற்ற 12 பேருக்கும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கடத்தும் தங்கத்தை நேரடியாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ விற்பனை செய்து வந்ததும், கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த கடத்தலில் 20 ஹவாலா கும்பல்களுக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்கள்தான் பணப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
Comments