சுலைமானி இருக்குமிடம் குறித்து உளவு சொன்னவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்-ஈரான் அரசு

0 2826
ஈரான் தளபதி சுலைமானி இருக்குமிடம் குறித்து உளவு சொன்னவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் தளபதி சுலைமானி இருக்குமிடம் குறித்து உளவு சொன்னவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

ராணுவத் தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு தகவல் கொடுத்ததாக மஹ்மூத் மவ்சாவி மஜித் என்பவரை ஈரான் கடந்த மாத இறுதியில் கைது செய்திருந்தது. சிஐஏ மற்றும் மொசாட் உளவு அமைப்புகளில் பணியாற்றிய இவர், சுலைமானியின் வாகனப் பயணம் குறித்த தகவல்களை அமெரிக்காவுக்கு தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு நேற்று அது நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments