பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியின் வாக்குமூலம் வரும் 24ம் தேதி பதிவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வாக்குமூலத்தை வரும் 24ம் தேதி சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்ய உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக முன்னாள் சிவசேனா எம்.பி. சதீஷ் பிரதான் வாக்குமூலத்தை காணொலிக் காட்சி மூலம் நாளை பதிவு செய்ய உள்ளது.
இதனைத் தொடர்ந்து 23ம் தேதி முரளிமனோகர் ஜோஷியின் வாக்குமூலமும், 24ம் தேதி அத்வானியின் வாக்குமூலமும் காணொலிக் காட்சி மூலம் பதிவு செய்யப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.
Comments