மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்

0 4793
மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவருக்கு வயது 85. சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த டாண்டன், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை எம்.எல்.சி.யாகவும் பதவி வகித்தார். 2009 தேர்தலில் வாஜ்பாயின் சொந்த தொகுதியான லக்னோவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஓராண்டாக மத்தியப் பிரதேச ஆளுநராக அவர் பதவி வகித்து வந்தார்.

லால்ஜி டாண்டனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments