நடப்பாண்டு ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட வாய்ப்பு

0 4661

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்த ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாலும், ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் திட்டமிடப்பட்டு இருந்ததாலும், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஆசியக்கோப்பையை தொடர்ந்து, டி20 உலகக்கோப்பையும் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தரப்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments