கொரோனாவுக்கு தடுப்பு மருந்து.. சாதித்தது ஆக்ஸ்போர்டு பல்கலை..!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், எதிர்ப்புசக்தியை உருவாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 9 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் 1077 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்த சோதனையில், மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவில் 18 முதல் 55 வயது உடையவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனகா கண்டுபிடித்த அடெனோ வைரல், லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் பிவிட்சர் நிறுவனம் கண்டுபிடித்த எம் ஆர் என் ஏ தடுப்பு மருந்து மற்றும் வால்னெவா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து ஆகிய 3 மருந்துகளும் பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சிலருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளே இருந்ததாகவும், அதுவும் சரி செய்யக் கூடிய அளவிலேயே இருப்பதாகவும் பல்கலைக்கழக ஜென்னர் நிறுவன இயக்குநர் அட்ரியன் ஹில் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளில் நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் உடலின் டி-செல்களில் எதிர்வினையை இந்த தடுப்பூசி ஏற்படுத்துவதாகவும், இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவுவதாகவும் அட்ரியன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கண்ட 3 நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு 9 கோடி கொரோனா தடுப்பு மருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.
Oxford’s Covid-19 vaccine produces a good immune response, reveals new study.
— University of Oxford (@UniofOxford) July 20, 2020
Teams at @VaccineTrials and @OxfordVacGroup have found there were no safety concerns, and the vaccine stimulated strong immune responses: https://t.co/krqRzXMh7B pic.twitter.com/Svd3MhCXWZ
Comments