பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் அதிகரித்துள்ள அமோக வரவேற்பு - மாணவர் சேர்க்கைக் குழு
நடப்பு கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் இணைய வழியில் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கலந்தாய்வு தொடங்கி 5 நாட்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது. திங்கட்கிழமை மாலை 5 மணி வரை 73 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீப ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகம் என்றும் பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளதாக மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
Comments