மக்களைப் பயமுறுத்த வேண்டாம் : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

0 2992
மக்களைப் பயமுறுத்திப் பீதிக்குள்ளாக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களைப் பயமுறுத்திப் பீதிக்குள்ளாக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், சென்னையில் முதலமைச்சரின் வழிகாட்டலில் அமைச்சர்களும் அதிகாரிகளும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து அயராது பாடுபட்டுக் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூர், மும்பை, டெல்லி நகரங்கள் இன்னமும் முடங்கியுள்ள நிலையில், சென்னையில் நோய்த் தொற்று விகிதத்தை 9 புள்ளி ஒன்று இரண்டு விழுக்காடு என்கிற ஒற்றை இலக்கத்துக்குள் கொண்டு வந்து, எட்டு மண்டலங்களில் முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவந்து சுகாதாரத்துறையுடன் இணைந்து மாநகராட்சி சாதித்துக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் முயற்சிகளைப் பாராட்டாவிடினும், சென்னையைச் சீனாவுக்கு இணையாக உருவகப்படுத்தி மக்களைப் பயமுறுத்திப் பீதிக்குள்ளாக்க வேண்டாம் என வேலுமணி, மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments