அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மாலை 6 மணிக்கு தொடங்குகிறது

0 3061
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

ஊரடங்கால் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுவதன் காரணமாக, முதல் முறையாக 109 அரசு கல்லூரிகளுக்கான ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு http://www.tngasa.in/ மற்றும் www.tncdeonline.org என்ற இணையதளங்கள் மூலமாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு http://www.tngptc.in/#/ மற்றும் http://www.tngptc.com/#/ என்ற இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல மாணவர்களுக்கு உதவ தமிழகம் முழுவதும் 36 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பது, இடங்கள், விண்ணப்பக் கட்டணம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 22351014, 044 - 22351015 என்ற எண்களுக்கு மாணவர்கள் அழைக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments