கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்தார், அமைச்சர் தங்கமணி

0 3780
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மின்துறை அமைச்சர் தங்கமணி பூரண குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளார். வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கடந்த8 ஆம் தேதி, சென்னை - கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தங்க மணி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணம் அடைந்து விட்டதால், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பினார். அமைச்சர் தங்கமணியை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஏற்கனவே, உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகி யோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதுதவிர சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேர், வைரஸ் தொற்று உறுதி ஆகி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments