சென்னையின் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் திரு.வி.க.நகர், பெருங்குடி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மணலி, அடையாறு, அண்ணாநகர் ஆகிய 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக திரு.வி.நகர் மண்டலத்தில் 8.4 சதவீதமும், பெருங்குடியில் 6.9 சதவீதம் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மீதமுள்ள 8 மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 4 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 3.4 சதவீதமும் குறைந்துள்ளது.
சென்னை முழுவதும் இதுவரை 85ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 69ஆயிரத்து 382 பேர் குணமடைந்துள்ளனர். 15ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஆயிரத்து 434 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னையின் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு | #ChennaiContainmentzone https://t.co/wfV0L34oYx
— Polimer News (@polimernews) July 20, 2020
Comments