தமிழகத்தில் மின்கட்டணம் உற்பத்தி செலவை விட குறைவு - அமைச்சர் தங்கமணி

0 2455
மின்சார அளவீட்டை உயர்நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் ஸ்டாலின் மட்டும் அதில் குளறுபடி என கூறுவது சந்தர்ப்பவாத அரசியல் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்சார அளவீட்டை உயர்நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் ஸ்டாலின் மட்டும் அதில் குளறுபடி என கூறுவது சந்தர்ப்பவாத அரசியல் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவருக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும், 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் தமிழகத்தில் 500 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால், இதேபோல் 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் கேரளாவில் 1,165 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,776 ரூபாயும் கட்டணமாக செலுத்துகின்றன.

தமிழ்நாட்டை விட அதிக மின்கட்டண விகிதம் உள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சித் தலைவர் விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் மிக மிக குறைவாக உள்ளது என தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.  கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதில்  எள்ளளவும் உண்மை இல்லை எனவும்  தங்கமணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments