கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை முடக்குமாறு யூ ட்யூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை

0 3948
கருப்பர் கூட்டம் சேனலை முடக்குமாறு, யூ ட்யூப் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

கருப்பர் கூட்டம் சேனலை முடக்குமாறு, யூ ட்யூப் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் இந்து மத  கடவுள்களையும், புராணங்களையும் இழிவு படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி வீடியோக்கள் வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில்  சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்பட்டாலும், இன்னும் பல சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சேனலில் இருப்பதால் முற்றிலுமாக அவற்றை தடை செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை தடை செய்வதற்கு  யூ ட்யூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments