காதலை கைவிட்ட கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன் கேரளாவில் கைது
கோவையில் பெற்றோரின் கண்டிப்பால் காதலை கைவிட்ட கல்லூரி மாணவியை கொலை செய்த இளைஞனை கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.
பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா, அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்ற இளைஞனை காதலித்துள்ளார். காதலுக்கு இரு வீட்டாருக்கும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ரதீஸுடன் பேசுவது ஐஸ்வர்யா தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் கடந்த வெள்ளி அன்று ஐஸ்வர்யாவின் வீட்டிற்குச் சென்ற ரதீஸ், தன்னிடம் பேசுமாறு கூறியுள்ளாள். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவன் கத்தியால் குத்தியதில் ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு தலைமறைவான ரதீஷை தேடி வந்த பேரூர் போலீசார், கேரள மாநிலம் பாலக்காட்டில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவனை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.
Comments