திருமழிசை காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் மீண்டும் ஆர்பாட்டம்
சென்னை அடுத்த திருமழிசை தற்காலிக சந்தையில் வாகனங்களை முறையாக அனுமதிக்கப்படவில்லை என கூறி, வியாபாரிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட், தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. முழு ஊரடங்கு விடுமுறைக்குப்பின் நேற்று சந்தையில் குவிந்த ஏராளமான வியாபாரிகள், திருமழிசையில் போதிய வசதிகள் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு நள்ளிரவில் விற்பனை தொடங்கியது. இந்நிலையில், காலையில் அதிகளவில் வாகனங்கள் வந்ததால் உள்ளே விட தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக கூறி கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமல், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
திருமழிசை காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் மீண்டும் ஆர்பாட்டம் #Chennai | #ThirumazhisaiMarket https://t.co/aSm9dWfcaH
— Polimer News (@polimernews) July 20, 2020
Comments