சேலம்- சென்னை எட்டுவழிச்சாலைத் திட்ட வழக்கு:உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இத்திட்டத்திற்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை - மதுரை இடையே மட்டுமே நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மத்திய அரசு விதிமுறைகளை மீறி சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு காணொலி மூலமாக இந்த வழக்கை இன்று விசாரிக்கிறது.
Comments