கேரள தங்க கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்
கேரள தங்க கடத்தல் வழக்கு குற்றவாளி சொப்னா சுரேஷுடன் 12 முறை தொலைபேசியில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ((K T Jaleel)) பேசிய தகவல் கசிந்துள்ள நிலையில், அவர் மீது வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
கடந்த ரமலான் நேரத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரமலான் நோன்பு கிட்டுகளை திருவனந்தபுரத்தில் உள்ள யுஏஇ துணை தூதரகத்தில் இருந்து அமைச்சர் ஜலீல் அன்பளிப்பாக வாங்கியதாகவும், இது விதிமீறல் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்பி பென்னி பெஹன்னான் என்பவர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த ரமலான் கிட்டுகளை பெறும் விவகாரம் தொடர்பாக மட்டுமே சொப்னா சுரேஷிடம் தொலைபேசியில் பேசியதாக அமைச்சர் ஜலீல் ஏற்கனவே சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments