பஞ்சாப்பில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா

0 1342

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அந்த மாநிலத்தில் இதுவரை 9 ஆயிரத்து 792 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 246 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மாநில அமைச்சர் ராஜிந்தர் சிங் பாஜ்வா, அவருடைய மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியிருந்தது.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பல்வீந்தர் தலிவால் ((Balwinder Dhaliwal )), தரம்பீர் ((Dharambir )) ஆகியோருக்கு தற்போது கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்விட்டர் பதிவில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில முதலமைச்சருமான அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments