கொச்சி அருகே அரபிக் கடலில் சீற்றத்துடன் எழுந்த அலைகள் - ஊருக்குள் புகுந்த கடல்நீர்
கேரள மாநிலம் கொச்சி அருகே செல்லனம் என்னும் ஊரில் கடல் கொந்தளிப்பால் ஊருக்குள் வெள்ளம்போல் கடல்நீர் புகுந்தது. தென்மேற்குப் பருவமழையால் கேரள மாநிலத்தில் மேற்கில் இருந்து பலத்த காற்று வீசுகிறது. இதனால் கொச்சி அருகே உள்ள செல்லனம் என்னும் ஊரில் பல அடி உயரத்துக்குச் அலைகள் சீற்றத்துடன் எழுந்தன.
அலைகளின் சீற்றத்தால் கடல்நீர் தடுப்புச் சுவரைக் கடந்து ஊருக்குள் வெள்ளம்போல் புகுந்தது. கடலரிப்பால் ஒரு வீடு முற்றிலும் இடிந்தது. 4 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.
Comments