ஓராண்டுப் பின் திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்த ஆட்டோகிளேவ் எந்திரம்
மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு 70 டன் எடையுள்ள ஆட்டோகிளேவை ஏற்றிவந்த லாரி ஓராண்டுக்குப் பின் வந்து சேர்ந்தது.
கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே வட்டியூர்க்காவில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்குத் தேவையான ஏரோஸ்பேஸ் ஆட்டோகிளேவ் என்னும் எந்திரம் மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் தயாரிக்கப்பட்டு 74 சக்கரங்கள் கொண்ட டிரைலர் லாரியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது.
ஏழரை மீட்டர் உயரம், ஆறரை மீட்டர் அகலத்துடன் 70 டன் எடைகொண்ட ஆட்டோகிளேவ் ஏற்றப்பட்ட லாரி கடந்த ஆண்டு ஜூலையில் நாசிக்கில் இருந்து புறப்பட்டது. ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் என்னும் வேகத்தில் மெதுவாக நத்தை வேகத்தில் நகர்ந்து 4 மாநிலங்களைக் கடந்து வந்த இந்த லாரி ஓராண்டு கடந்து இன்று திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தது.
Comments