பள்ளிகள் திறப்பு - மத்திய அரசு கருத்து கேட்கிறது
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கவலையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அது தொடர்பான சில விளக்கங்களுக்கு பதிலளிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில, யூனியன் பிரதேச கல்வித் துறை செயலாளர்களுக்கு இது தொடர்பாக அனுப்பி உள்ள கடிதத்தில், ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபரில் எந்த மாதத்தில் பள்ளிகளை திறப்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வசதியாக இருக்கும் என பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அது போன்று பள்ளிகள் எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர் உள்ளிட்ட விவரங்களை வரும் 20 ஆம் தேதிக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்யுமாறு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு - மத்திய அரசு கருத்து கேட்கிறது #SchoolsOpen #CentralGovt https://t.co/SOV435O7wW
— Polimer News (@polimernews) July 19, 2020
Comments