கொரோனாவைக் குணப்படுத்த ஆர்என்ஏ அடிப்படையிலான மருந்து
புனேயைச் சேர்ந்த நிறுவனம் கொரோனாவைக் குணப்படுத்தத் தயாரித்துள்ள மருந்தை அக்டோபரில் மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளது.
புனேயைச் சேர்ந்த ஜென்னோவா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் கொரோனாவைக் குணப்படுத்த ஆர்என்ஏ அடிப்படையிலான மருந்தைத் தயாரித்துள்ளது. இதை இரண்டு கட்டங்களாக மனிதர்களுக்குச் செலுத்திச் சோதித்த பின் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டச் சோதனையை அக்டோபர் மாதத்தில் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அமெரிக்காவின் மாடர்னா, பைசர் பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் ஆர்என்ஏ அடிப்படையிலான மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. அவற்றின் முதற்கட்டச் சோதனை முடிந்துள்ள நிலையில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புனேயைச் சேர்ந்த ஜென்னோவா நிறுவனம் தயாரித்துள்ள மருந்தும் சோதிக்கப்பட உள்ளது.
Comments