பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 20,74,860 ஆனது
பிரேசிலில், ஒரே நாளில் 28 ஆயிரத்து 352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 20 லட்சத்து 74 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் கொரோனாவுக்கு பலியானதால், இறப்பு எண்ணிக்கை 78ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உலகில் 2 ஆவது நாடாக இருந்தாலும், பிரேசிலில் வர்த்தக நடவடிக்கைளை மீண்டும் துவக்குவதில் அரசு தீவிரமாக உள்ளது.
Brazil reports 28,532 new cases of coronavirus and 921 deaths https://t.co/wmTC4ZIXlP pic.twitter.com/nYO7r2JvWy
— Reuters (@Reuters) July 18, 2020
Comments