சுரேந்தர் மீது epass இல்லாமல் வந்தது, முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

0 6755
கருப்பர் கூட்டம் தொகுப்பாளர் சுரேந்தர் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் மீது இபாஸ் இன்றி வந்தது, முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமான பொருள்படும் வகையில் பேசியது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தரை போலீசார் தேடி வந்த நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசாரிடம் சுரேந்தர் சரண் அடைந்தார்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரிக்கு வந்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் இன்றி வந்தது, அனுமதியின்றி கூட்டம் கூட்டியது, முகக்கவசம் அணியாதது குறித்து கிராம நிர்வாக அதிகாரி செல்வி அளித்த புகாரின்பேரில் சுரேந்தர் மற்றும் உடன் இருந்த 5க்கும் மேற்பட்டவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments