நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

0 3013
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த நபர் நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நடிகர் அஜித்தின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதையடுத்து, அவர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்பதும், கடந்த வாரம் இதேபோன்று, நடிகர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த மரக்காணம் போலீசார், நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments