கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், எம்எல்ஏ-வுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் வருகையின்போது, அரசு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் தங்களை அழைக்கவில்லை எனக்கூறி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன், தளி எம்எல்ஏ பிரகாஷ் , ஓசூர் எம்எல்ஏ சத்யா, வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து விட்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊர்வலம் சென்றனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments