6300 பேருக்கு பொய்யான கொரோனா நெகட்டிவ் சான்று..! தனியார் மருத்துவமனை நிர்வாகி கைது

0 19702
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியாக சான்று அளித்து நோய் பரவக் காரணமான தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் ஒருவர் புர்கா அணிந்து இந்தியாவிற்கு தப்ப முயன்ற போது அந்த நாட்டு போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியாக சான்று அளித்து நோய் பரவக் காரணமான தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் ஒருவர் புர்கா அணிந்து இந்தியாவிற்கு தப்ப முயன்ற போது அந்த நாட்டு போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பங்களாதேஷ் நாட்டில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2457 பேர் உயிரிழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது.

அங்குள்ள பணத்தாசை பிடித்த தனியார் மருத்துவமனையின் செயலால் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மருத்துவமனை நடத்தி வந்தவர் பிரபல மருத்துவர் முகமது ஷாகித். இவரது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் டாக்காவில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி அவர்களுக்கு கொரோனா இல்லை நெகட்டிவ் என்று முகமது சாகீத் சான்றிதழ் வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், டாக்காவில் இருந்து வெளி நாடுகளுக்கு விமானம் மூலம் சென்ற ஏராளமானோர் கொரோனா பாதிப்புக்குள்ளாவதாக அந்த நாட்டு தூதரகத்துக்கு தகவல் வந்தது. இதனால் பல நாடுகள் பங்களாதேஷ் விமானங்களை தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்தன.

இதையடுத்து வெளிநாடு சென்ற நபர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் பெரும்பாலானவர்கள் முகமது சகீத்தின் மருத்துவமனையில் சான்று பெற்றிருப்பது தெரியவந்தது.

அவரது மருத்துவமனையில் நடத்திய ஆய்வில் இதுவரை 10500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி இருப்பதும் அதில் 4200 பேருக்கு சரியான சான்றிதழ் வழங்கி உள்ளதையும், 6300 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்று பொய்யான தகவலை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கி இருப்பதையும் கண்டுபிடித்தனர். இதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உள்நாட்டில் மட்டுமல்லாமல் பங்களாதேஷில் இருந்து வெளி நாட்டிற்கும் கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சில நாட்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்திய எல்லையில் பெண் போல புர்கா அணிந்து கொண்டு இந்தியாவிற்குள் தப்ப முயன்ற முகமது ஷாஹீத்தை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரை சர்வதேச டான் போல கையில் விலங்கிட்டு ஹெலிகாப்டரில் ஏற்றி விசாரணைக்காக அழைத்து சென்றனர்

இவரது பணத்தாசை பிடித்த இந்த செயலால் டாக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments