”கட்டாயம் மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிடமாட்டேன்” - அதிபர் ட்ரம்ப்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிடமாட்டேன் என, அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அங்கு நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபாசி, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என மாகாண மற்றும் உள்ளூர் தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள ட்ரம்ப், மக்களுக்கென குறிப்பிட்ட சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் மாஸ்க் அணிந்தால் கொரோனா மறைந்துவிடும் என்ற கருத்துக்கு தான் உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே ட்ரம்ப் மாஸ்க் அணிந்து பொதுவெளியில் வந்தது குறிப்ப்பிடத்தக்கது.
”கட்டாயம் மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிடமாட்டேன்” - அதிபர் ட்ரம்ப் | #Mask | #DonaldTrump https://t.co/xiPXTH1C3j
— Polimer News (@polimernews) July 19, 2020
Comments