நள்ளிரவு முதல்.... ஞாயிறு ஒருநாள்., தளர்வற்ற முழு ஊரடங்கு.!
தமிழ்நாட்டில், ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், எவ்வித தளர்வுகளும் அற்ற தீவிர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதன்படி, எவ்வித தளர்வுகளும் அற்ற, ஒருநாள் தீவிர முழு ஊரடங்கு, 3வது முறையாக இன்று அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், காவல்துறை, மருத்துவமனை வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படும்.
அவசர மருத்துவத் தேவைகளுக்கு தவிர, மற்ற எதற்காகவும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசும், காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments