தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறையில் 61,000 பேர் குணம்-அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மூலம் கொரோனாவில் இருந்து 61 ஆயிரம் பேர் குணமாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,கொரனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வது குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதட்டமோ அடைய வேண்டாம் என்றும், ஒருங்கிணைந்த மருத்துவ முறையான சித்தா ,அலோபதி,ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற சிகிச்சை முறைகளால் தொற்று கட்டுபடுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
உலகத்திலேயே தமிழகத்தில் தான் முன்மாதிரி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments