அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களை கண்காணிக்க செயலி

0 8045

எந்த அறிகுறிகளும் இல்லாமல், வீடுகளில் தனிமையில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களுக்கான செயலி ஒன்றை தெலங்கானா அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஐதராபாத் ஐஐடி (IIT) உருவாக்கி உள்ள இந்த செயலி வாயிலாக ஒரு மருத்துவர் 50 தொற்றாளர்களுடன் இணைக்கப்படுவார். தொற்றாளர்கள் குறித்த விவரங்களை மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஓய்வு பெற்ற மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள், இந்த செயலி மூலம் வீடுகளில் இருக்கும் தொற்றாளர்களின் நிலையை கண்காணித்து தேவையான மருத்துவ அறிவுரைகள் மற்றும் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்  என்றும் ஐதராபாத்தில் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments