ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.6659 கோடி நிகர லாபம் ஈட்டிய எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆறாயிரத்து 659 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
தனியார் துறை வங்கிகளில் மிகப்பெரியதான எச்டிஎப்சி வங்கி ஏப்ரல் - ஜூன் காலக்கட்டத்துக்கான லாபநட்டக் கணக்கு அறிக்கையை செபி அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் முதல் காலாண்டில் ஆறாயிரத்து 659 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது 19 புள்ளி 6 விழுக்காடு அதிகமாகும். மூன்று மாதங்களில் 34 ஆயிரத்து 453 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 11 ஆயிரத்து 769 கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் இந்த ஆண்டு 13 ஆயிரத்து 773 கோடி ரூபாயாக உள்ளது.
Comments