ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாயாவதி வலியுறுத்தல்
ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி குறித்து தமது டுவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டு உள்ள அவர், ராஜஸ்தானில் நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, இந்த பரிந்துரையை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் ஜனநாயகத்தை காக்க முடியும் என மாயாவதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டதின் மூலம் 2 ஆவது முறையாக தங்களை ஏமாற்றி விட்டதாகவும், கட்சித் தாவல் சட்டத்தை பகிரங்கமாக மீறி, சட்ட விரோத மற்றும் அரசியலமைப்பிற்கு மாறான காரியங்களில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டு உள்ளது தெளிவாகி உள்ளதாகவும் தமது பதிவில் மாயாவதி தெரிவித்துள்ளார்.
Comments