தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையை கபளீகரம் செய்ய முயற்சி -குருமூர்த்தி
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை கபளீகரம் செய்யும் முயற்சிகள் நடப்பதாகவும், ராகுல் காந்தியின் உதவியாளரான கனிஷ்கா சிங்கிடம் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் கட்டுப்பாடுகள் சென்றுவிட்டதாகவும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், இது நேஷனல் ஹெரால்டு ஊழலை விடவும் 10 மடங்கு பெரிதானது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009 ல் காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்களை டெல்லிக்கு வரவழைத்த ராகுல் காந்தி, அவர்களிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாக குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிவித்துள்ள அவர்,அங்குள்ள மைதானத்தில் பலமாடி கட்டிடம் கட்ட சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.
குருமூர்த்தியின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அறக்கட்டளை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், விதிகளுக்கு மாற்றாக அங்கு கட்டிடம் எதுவும் எழுப்ப முடியாது என்றும், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.
Comments