விகாஸ் துபே என்கவுன்டர்-உ.பி.அரசு விளக்கம்..!
கான்பூர் தாதா விகாஸ் துபே, என்கவுன்டரில் கொல்லப்படுவதற்கு முன்னர் போலீசாரை நோக்கி 9 ரவுண்டுகள் சுட்டதாக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த என்கவுன்டர் தொடர்பாக நடக்கும் விசாரணையில், விகாஸ் துபேயை கொண்டு வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், அதில் இருந்த 4 காவலர்களும் மயங்கி விட்டதாகவும் அப்போது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விகாஸ் துபே ஓட முயன்றதாகவும் உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்தது.
அவனை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுவில் இருந்தவர்கள் முயற்சித்த போது, விகாஸ் துபே சுட்டதால் டிஎஸ்பி உள்பட 3 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு முயற்சியாக சிறப்பு போலீசார் 6 ரவுண்டுகள் சுட்டதில் 3 குண்டுகள் விகாஸ் துபேயின் உடலை முன்பக்கம் துளைத்ததாக கூறப்பட்டுள்ளது. அவனுக்கு ஏன் கைவிலங்கு அணிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, 15 காவலர்கள் உதவியுடன் அவன் கொண்டுவரப்பட்டதால் கைவிலங்கு அணிவிக்கவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Comments