ஓராண்டுக்குள் தன்னை முதலமைச்சராக்க சச்சின் பைலட் வலியுறுத்தல்

0 8416
கோரிக்கையை ஏற்கும் வரை சோனியாவையும் ராகுலையும் சந்திக்க மறுப்பு

ஓராண்டுக்குள் தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என சச்சின் பைலட் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகப் பிரியங்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுத் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

சச்சின் பைலட்டை இணக்கப்படுத்தப் பிரியங்கா தொலைபேசியில் பேசியதாகவும், முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதில் இருந்து அவர் பின்வாங்காததால் 3 மணி நேரத்தில் பதவி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தன்னை ஓராண்டுக்குள் முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் மேலிடத்தில் தொடர்ந்து சச்சின் பைலட் வலியுறுத்தி வந்ததாகவும், அப்படி அறிவிக்கும் வரை சோனியாவையும் ராகுலையும் சந்திக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டதாகவும் பிரியங்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments