ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், மு.க.ஸ்டாலின் நிதியுதவி மற்றும் நிவாரண உதவி
ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உணவு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், நிதியுதவி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திக்கா குளம் தெருவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அவர் காலை உணவு வழங்கினார். 30 நாட்களில் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் மனிதநேய திட்டத்திற்கு நிதியுதவி வழங்கி, அந்த திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டான் போஸ்கோ பள்ளியில் 30 மகளிர் சுய உதவிக்குழுவை 300 மகளிர்களுக்கும், பள்ளியில் உள்ள 19 தூய்மைப் பணியாளர்களுக்கும் மளிகை பொருட்கள் மற்றும் 500 ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
மேலும் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி , 500 ரூபாய் நிதியுதவியை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோல மாணவிகளுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள், டேலி பயிற்சி முடித்த 101 மாணவிகளுக்கு சான்றிதழ், மடிக்கணினி மற்றும் நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் வழங்கினார்.
Comments