எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் -அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில், "கொரோனா இல்லாத தண்டையார்பேட்டை" எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் தொடர்ந்து 18வது நாளாக கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், 70 சதவீதமாக இருந்த தொற்று தற்போது 29 சதவீதமாக உள்ளது எனவும் கூறினார்.
சமூக பரவல் விகிதத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனியுக்தியை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் இதுவரை சமூக பரவல் இல்லை என்றார்.
மேலும் தண்டையார்பேட்டையை ஜுலை 31க்குள் கொரோனா இல்லா பகுதியாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக தொண்டு நிறுவனங்களின் உதவியோடு Www.ajmf.in என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் -அமைச்சர் பாண்டியராஜன் #MinisterPandiarajan #LeadersStatue https://t.co/cD3zj9SJjF
— Polimer News (@polimernews) July 18, 2020
Comments