கொரோனாவிற்கு மருந்து இல்லாத நிலையில், 1 லட்சம் பேர் குணப்படுத்தியுள்ளதே சாதனைதான் - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2827
தனியார் மருத்துவமனைகள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

எந்தவித மருந்துகளும் இல்லாமல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தியுள்ளதே சாதனை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை குறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 4 பேருமே குணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தேவைக்கேற்ப படுக்கை வசதிகளும், சுவாச உதவிக் கருவிகளும் மதுரை மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது, இதற்காக 76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments