சீன நிறுவனத்துடனான இந்திய ரயில்வே ஒப்பந்தம் ரத்து
சரக்குப் போக்குவரத்துக்கான ரயில்பாதையில் சிக்னல், தொலைத்தொடர்பு வசதிகளைச் செய்துதரச் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.
பஞ்சாபின் லூதியானா, மேற்குவங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்துக்கென்றே தனி ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் - முகல்சராய் இடையே 417 கிலோமீட்டர் தொலைவுக்கு சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம் சீனாவின் பெய்ஜிங் நேசனல் ரெயில்வே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகளாக 20 விழுக்காடு பணிகளே நடந்துள்ளன. முறையாகப் பணிகளை முடிக்காத காரணத்தால் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 471 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான கடிதத்தை வெள்ளியன்று சீன நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளதாகச் சரக்குப் போக்குவரத்து ரயில்பாதை அமைக்கும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அனுராக் சச்சன் தெரிவித்துள்ளார்.
Comments